10
May
10

பின் நவீனத்துவம் ஒரு பார்வை
(6-12-2009 அன்று ஸ்ட்ராஸ்பூர் இலக்கியதேடல் அமர்வில் நிகழ்த்திய உரை)
நாகரத்தினம் கிருஷ்ணா
ஒரு மொழியில் இலக்கணம் என்பது அம்மொழி ஓரளவு வளர்ச்சியை எட்டிய பிறகே, அம்மொழியின் பயன்பாட்டின் அடிப்படையில் (வாய்மொழி இலக்கியம் எழுத்து எழுத்திலக்கியம்) இலக்கணம் வரைவு உருவாகிறது. தொல்காப்பியத்தில் முன்னோர்கள் சொல்பவனவாகவும், பழைய நூல்களை உதாரணத்திற்கு எடுத்தும் எழுதப்பட்டிருப்பதைவைத்து தொல்காப்பியத்திற்கு தமிழ் முந்தையது எனத் தீர்மானிக்கிறோம்.
இன்றைய பிரெஞ்சுமொழி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து வழக்கிலிருந்ததென்று கொள்ளவேண்டும். அதுவரை இங்கே இலக்கியமென்றால் லத்தீன் மொழியின் ஆதிக்கத்தின் கீழ்வந்தது. ஒன்பதாம் நூற்றாண்டுவரை வெகுசன மொழியாகவிருந்த இன்றைய பிரெஞ்சுமொழியின் பூர்வீக மொழிக்கு அப்போது ரொமான் மொழி என்று பெயர். தமிழ்போல அல்லாமல் பிரெஞ்சுமொழி ஒரு வட்டாரமொழியிலிருந்து(Dialectes -Patois) பிறந்தமொழி. எனினும், இந்த நூற்றாண்டில் ஆங்கிலத்தைபோலவே பிரெஞ்சும் உலகில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளில் பேசப்படுகிற மொழியாக மாறி இருக்கிறது.
பின் நவீனத்துவம் எங்கிருந்து பிறந்தது ஏன் பிறந்தது எதற்காக பிறந்ததுபோன்ற கேள்விகள் அவசியமற்றது. ‘தக்கன உயிர்பிழைக்கும்என்ற டார்வின் கோட்பாடு உயிரியலுக்கு மட்டும் உரித்தானதல்ல, மொழி, கலை, இலக்கியம் பண்பாடென்ற உயிர் சார்ந்த இயங்கியலுக்கும் பொருந்தும். இன்றிருக்கும் நமது தமிழும் பல படிநிலைகடந்தே இந்நிலையை எட்டியிருக்கிறது, நாளை அல்லது எதிர்காலத்தில் வேறு மாற்றங்களை பெறலாம். காலத்திற்கொப்ப ஒரு மொழி இலக்கிய மொழியாக, அறிவியல் மொழியாக, சிந்தனை மொழியாக, அரசியல் மொழியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தமிழ் கடந்துவந்த பாதையைப் பார்க்கிறபோது இங்கும் அது சாத்தியமே என்று புலனாகிறது. .
1. பழங்கால இலக்கியம்
. சங்க இலக்கியம்(கி.மு 500-கி.பி.200வரை அகம் புறம் பாட்டுகள்) ஆ நீதி இலக்கியம்(கி.பி.100-கி.பி.500வரைதிருக்குறள்), . பழைய காப்பியங்கள்சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம்… )
2. இடைக்கால இலக்கியம்:
Advertisements

1 Response to “”


  1. August 16, 2010 at 3:02 am

    நல்ல தலைப்பு.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s



vhmvvhioihv
ojvojvùv
ùojvùokvv


%d bloggers like this: