07
Dec
09

இலக்கியத் தேடல் இரண்டாம் கூட்டம்

இலக்கியத் தேடல்  இரண்டாம் கூட்டம்
06.12.2009  ஞாயிறு  அன்று சுட்ராசுபூரில்
(Strasbourg) காலை பத்து மணிக்குத்  தொடங்கியது  .
ஈழத் தமிழன்பர் திரு கிருபா மன்றம் ஒன்றில் ஏற்பாடு செய்து இருந்தார் .
 இதில் கலந்துகொண்டவர்கள் : (அமர்ந்த வரிசைப் படி )
திரு நாகரத்தின கிருஷ்ணா
திரு கிருபா
திருமதி கலையரசி
திரு அலன் ஆனந்தன்
திருமதி பானுமதி
அலன் ஆனந்தன்
திருமதி பூங்குழலி பெருமாள்
திருமதி லூசி யா  லெபோ
திருமதி உஷா தேவி
திருமதி ஷர்மிலா நடராஜா
திரு கனகராஜா
திரு பெருமாள்
திரு பாக்கியராஜா சூசை
திரு இராமலிங்கம் ஓச்
திரு
ஆர்னோ அருணகிரி
திருமதி கிரிஜா நாகரத்தினம்
திரு அண்ணாதுரை
திரு சிவாஜி
திரு கியோம் திமோன்
திரு கோவிந்தசாமி செயராமன்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
பாரிஸ் பார்த்தசாரதி
இலங்கைவேந்தன் பாண்டுரங்கன்

பொன்னம்பலம் வடிவேலு.
 திருமதி  பூங்குழலி பெருமாள்

இறை  வணக்கம், தமிழ்த் தாய்  வாழ்த்து
பாட விழா இனிதே தொடங்கியது

திரு கிருபா அனைவரையும் இனிய தமிழில்
வரவேற்றார்.
பேராசிரியர்
பெஞ்சமின் லெபோ
இலக்கியத்தேடல் பற்றிச் சுருக்கமாக விளக்கினார்.
பிறகு ஒவொருவரும் தத்தம் பெயர் கூறித்
தம்மை அறிமுகம் செய்துகொண்டனர்.

முதல்  உரையைத் திரு  நாகரத்தின கிருஷ்ணா
நிகழ்த்தினார் . தலைப்பு :
பின் நவீனத்துவம் .
மரபு, அதிலிருந்து நவீனம்
அதன் பின் எழுவது பின் நவீனம்.
நவீனத்துக்கும் பின் நவீனத்துக்கும் உள்ள
வேறுபாடுகள் … இவற்றை விளக்கினார் .
நீலக் கடல், மதாரி என்ற தம்  நூல்களை
அடிபடையாகக்கொண்டு விளக்கம் தந்தார்.
அவையினர் ஐயங்கள் பலவற்றை எழுப்பினர்.
 
திரு  நாகரத்தின கிருஷ்ணா அவற்றுக்கு
விடையளித்தார்.

இவருடைய உரை இங்கே
விரைவில் வெளியிடப்படும்.


அதன்பின்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
தம் உரையை நகையும் சுவையுமாக வழங்கினார்.
தலைப்பு :
இக்காலச் சிக்கல்களுக்கு அக்காலத் தீர்வுகள்
.
இந்தக் காலத்தில் நாம் எதிர்கொளும்
சில சிக்கல்களை விளக்கி அவற்றுக்கான தீர்வுகள்
அக்கால இலக்கியங்கள்,  கதைகள் முதலியவற்றில்
காணப்படுவதை மேற்கோள், எடுத்துக்காட்டுகளோடு 
விளக்கினார்.
அவர் உரையில்
திருக்குறள், புறநானூறு, கம்ப இராமாயணம்… முதலிய
இலக்கிய நூல்களும் தெனாலி ராமன் கதை முதலியனவும்
ஏராளமாக இடம் பெற்றன.
அவையினர் விடுத்த கேள்விக்  கணைகளுக்கு
விளக்கமும் பதிலும் அளித்தார்.
பின்னர்,
திரு கோவிந்தசாமி செயராமன்,
திரு   & திருமதி நாகரத்தின கிருஷ்ணா இணையருககுப்
பொன்னாடை
  போர்த்தினார்.
திரு அலன் ஆனந்தன், திரு பாரிஸ்  பார்த்தசாரதி
முதலியோர்
திரு   & திருமதி நாகரத்தின கிருஷ்ணா இணையருககுப்
பொன்னாடை
  வழங்கிப் பெருமை படுத்தினர்.
திரு கோவிந்தசாமி செயராமன்  அனைவருக்கும்
நன்றி  கூற விழா இனிதே நிறைவுற்றது.

பிறகு மதிய உணவை அனைவரும் பகிர்ந்து உண்டனர்.
உண்ணும் போதும் கேள்வி நேரம் தொடர்ந்தது .
உவப்பத் தலை கூடியவர்கள், இறுதியில்
உள்ளப் பிரிந்தனர்.
இவருடைய உரையும் விரைவில் இங்கே  இடம் பெறும்.
ஏனைய படங்கள் விரைவில் பிகாசா ஆல்பத்தில் வெளிவரும்.



அதன் சுட்டி (lien / link) இங்கே தரப்படும்.

Advertisements

0 Responses to “இலக்கியத் தேடல் இரண்டாம் கூட்டம்”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s



vhmvvhioihv
ojvojvùv
ùojvùokvv


%d bloggers like this: