அன்புசால் இலக்கிய ஆர்வலர்களே!
அன்பு வணக்கம்.
நம் இலக்கியத் தேடல் 2 ஆம் கூட்டம்
வரும் தெசாம்பர்த் திங்கள்
6 -ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை
காலை 10.00 மணிக்கு
ஸட்ராஸ்பூர்க் நகரில் நடைபெறுகிறது.
அங்குள்ள அன்பர்கள்
விழா இனிதே நடைபெற சிறு மன்றம்
ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நம் நன்றிகள்.
அதன் முகவரி :
Centre Socio-Culturel
Cronenbourg
56, Rue Rieth
67200- Strasbourg
நண்பர் நாகரத்தின கிருட்டிணா
பேசவிருக்கிற உரையின் தலைப்பு :
பேசவிருக்கிற உரையின் தலைப்பு :
‘பின்நவீனத்துவம்’
உரையின் சுருக்கம்:
இலக்கியத்தின் காலவெளிகள் – நவீனத்துவம் –
பின் நவீனத்துவமென்றால் என்ன?
பின் நவீனத்துவத்துவமும் இலக்கியமும்
பின் நவீனத்துவத்துவமும் இலக்கியமும்
– தமிழில் பின் நவீனத்துவம்.
இலக்கியத்தில் காலவெளிகள்:
காலங்கள் தோறும் இலக்கியம்
எவ்வாறு அடையாளம் பெற்றது
அதன் சிறப்புத் தன்மைகள் – சுருக்கமாக.
நவீனத்துவம் என்றால் என்ன?
அது தரும் புரிதல் – அதன் தோற்றம்
– படைப்பிலக்கியத்தில் அதன் பங்கு -முடிவு.?
பின் நவீனத்துவம் என்றால் என்ன?
– பின் நவீனத்துவக் கர்த்தாக்கள்-
மேற்குலக இலக்கியங்களில் பின் நவீனத்துவம் –
தமிழில் பின் நவீனத்துவம் :
-சுந்தரராமசாமி -ப்ரேம்-ரமேஷ் – ஜெயமோகன் – எஸ்-ராமகிருஷ்ணன்.
காலம் கிடைப்பின்
இன்னொருவரும் உரையாற்றக் கூடும்.
தலைப்பு அங்கே அறிவிக்கப்படும்.
நல்லதொரு தேடல் அனுபவம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
அன்பன்
பெஞ்சமின் லெபோ
Advertisements
0 Responses to “06.12.09 நடைபெறும் இலக்கியத் தேடல் பற்றிய புது விவரம்”