27
Sep
09

இலக்கியத் தேடல் தொடக்க விழா

அன்புசால் ஆர்வலர்களே!


கனிவான கைகுவிப்பு!


26.09.09 அன்று
மாலை 4.00 மணி அளவில்

இலக்கியத் தேடல் தொடக்க விழா தொடங்கியது.


அமைப்பாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
கீ்ழ்க் கண்டவாறு இறைவேட்டலை நடத்தினார் :

“அன்பின் இறைவா! அப்பா! தந்தாய்!
இன்புறும் உயிர்களுக்கு எல்லாம் தந்தாய்!
உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனே!
உலகம் யாவையும் தாமுளவாக்கிய பெரியவனே!
அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே!
வருவாய், வருவாய், வி்ரைந்து வருவாய்!
தருவாய் தருவாய் நலமெலாம் தருவாய்
தாள்பணிந்தோம் நாயகனே திருவருள் அருள்வாய்!”

பின்,


பாவேந்தன் பாரதிதாசன் பாடிய
“வாழ்வினில் செம்மை செய்பவள் நீயே…”
என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைத் தம்
இனிய குரலில் திருமதி பெருமாள் பூங்குழலி
பாடி முடிக்கத் தொடக்க விழா இனிதே தொடங்கியது.

வந்திருந்தோர் :


– திருமதி ராஜேசுவரி சிமோன்,
(‘ஞான தீபம்’ துணை ஆசிரியர்)


– திருமதி லூசியா லெபோ
( ‘ஞான தீபம்’ துணை ஆசிரியர்)


– திருமதி பூங்குழலி பெருமாள், M.A, M.Phil


_செவாலியே யூபர்ட் சிமோன்,
(இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகம், பிரான்சுக் கம்பன் கழகம் ஆகியவற்றின் பொதுச் செயலர்)


– திருமிகு அலன் ஆனந்தன்,
(உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர்)


– திருமிகு நாக ரத்தினக் கிருட்டிணா,
(தமிழக அரசின் பரிசு பெற்ற எழுத்தாளர்)


– திருமிகு கோவிந்தசாமி செயராமன்,
(‘முத்தமிழ் மன்றம்’ தலைவர், ‘தமிழ் வாணி’ தாளிகை, இணையதளத்தின் ஆசிரியர்)

– பாரிஸ் பார்த்தசாரதி

( புகழ் பெற்ற துணுக்கு எழுத்தாளர்)

-திருமிகு ஓஷ் இராமலிங்கம், M.A

– திருமிகு ஆறுமுகம் பெருமாள்.


– பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, (அமைப்பாளர்)

இலக்கியத்தேடலின் நோக்கம் நல்ல இலக்கியங்களைத் தேடிப் படித்துப்
பிறருக்கும் அதனை அறிவித்தல் என்று பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
விளக்கினார்.


அவர் கூறிய கருத்துகள் :
– மூன்று திங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடைபெறும்.
– முற்கால, அல்லது தற்கால இலக்கியம் பற்றி ஒருவர் உரை ஆற்றுவார்,
பிறகு அது பற்றிய விவாதம் நடைபெறும்.
– இந்த அமைப்பு எந்தக் கழகத்தின் சார்போ
எந்தச் சங்கத்தின் சார்போ இல்லாதது ; பொது அமைப்பு.

பின்னர் எப்படித் தலைப்புக்கள் எடுக்கலாம், கொடுக்கலாம்
என்பது போன்ற பொது விவாதம் நடைபெற்றது.
ஆர்வலர்கள் இதில் ஆர்வமுடன் பங்கு கொண்டனர்.

கூட்டத்தில் எடுத்த முடிவுகள் :


:- அடுத்த கூட்டத்தின் நாளும் இடமும் முடிவான பிறகு
தெரிவிக்கப்படும்.
– திரு நாக ரத்தின கிருட்டிணா, ‘பின் நவீனத்துவம்’ என்ற தலைப்பில்
அடுத்த கூட்டத்தில் உரை ஆற்ற ஒப்புக்கொண்டார்.
– ஸ்ட்ராஸ்பூரில் உள்ள தம் இல்லத்தில் அதனை வைத்துக்கொள்ளலாம்
என அவர் அழைப்பு விடுத்தார்.

மாலை ஐந்து மணி அளவில் கூட்டம் நிறைவு பெற்றது.






கூட்டம் நடை பெற இடம் தந்தவர் திரு அலன் ஆனந்தன்.
அதற்கான் முன்னணி ஏற்பாடுகளைச் செய்தவர் திரு கோவிந்தசாமி செயராமன்.






இருவருக்கும் அமைப்பாளர், ஆர்வலர்களின் நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

Advertisements

0 Responses to “இலக்கியத் தேடல் தொடக்க விழா”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s



vhmvvhioihv
ojvojvùv
ùojvùokvv


%d bloggers like this: